திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி 2 வது தெருவில் குடியிருக்கும் நயினார் பாண்டியன் மகன் சுப்பையா பாண்டியன் (68). என்பவருக்கும், அவரது உறவினரான தியாகராஜ நகர் 16 வது தெருவை சேர்ந்த பால் ஜெயச்சந்திரன் மகன் இம்மானுவேல் பாண்டியன்(38). என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. அதன் காரணமாக (10.09.2024) ஆம் தேதி சுப்பையா பாண்டியன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி, இரும்பு கம்பியால் வீட்டின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இம்மானுவேல் பாண்டியன் (20.09.2024) மீது வழக்கு பதிவு செய்து பெருமாள்புரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்