திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழகல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து (27). என்பவர் (15.09.2024) அன்று தனது தாயுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டு இருந்த போது அங்கு வந்த கோடகநல்லூர், காலணி தெருவை சேர்ந்த பிரகாஷ் (20). முத்துராமன் (25). ஆகிய இருவரும் சேர்ந்து இசக்கிமுத்துவின் தாயை பார்த்து அவதூறாக பேசியுள்ளனர். இது பற்றி இசக்கிமுத்து தட்டி கேட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், முத்துராமன் இருவரும் சேர்ந்து இசக்கிமுத்துவை கம்பால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி அவரது தாயையும் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து இசக்கிமுத்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், மேகலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரகாஷ், முத்துராமன் இருவரையும் (16.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்