திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் செண்பகம்பிள்ளை மேலத் தெருவில் கணேசன்(49). என்பவரிடமும், அங்கு குடியிருக்கும் பொதுமக்களிடமும் அதே தெருவில் வாடகைக்கு வசித்து வந்த ஜான் என்ற சுப்பிரமணியன்(25). அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், தெருவில் வசிப்பவர்கள் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரிடம் முறையிட்டு அவரை வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன் பகையின் காரணமாக, ஜான் என்ற சுப்ரமணியன், மகில்வண்ண நாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(24). மற்றும் ஒரு சிறுவனும் சேர்ந்து தெருவில் நிறுத்தி இருந்த சுமார் 12 இருசக்கர வாகனங்கள், மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி, அச்சுறுத்தி மிரட்டல் விடுத்ததாக (03.11.2024)-ஆம் தேதி பெற்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டவுன் காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்