திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அழகப்பபுரம், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகவேல் (55). என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் (12.10.2024) அன்று ஆறுமுகவேல் பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி, வீட்டின் கதவு, ஜன்னல் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து பாலசுப்பிரமணியன் திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆறுமுகவேலை (13.10.2024) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்