திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து, ரைஸ் மில் தெருவை சேர்ந்த வேலம்மாள்(39). என்பவரின் மகளிடம் (03.10.2024) அன்று அதே பகுதியை சேர்ந்த பொன் இசக்கிமுத்து (20). என்பவர் பேசியுள்ளார். அதனை வேலம்மாளும் அவருடைய தம்பியும் சென்று கேட்டதற்கு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வேலம்மாள் தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர், அருண்ராஜா வழக்கு பதிவு செய்து பொன் இசக்கிமுத்துவை (04.10.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்