திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை முதுமொத்தான் மொழி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (34). என்பவர் நம்பி குறிச்சி ரோடு அருகே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.(07.12.2024) அன்று ஆனந்தகுமார் கோழிப்பண்ணைக்கு சென்று பார்த்த போது ரூமில் வைத்திருந்த சுமார் ரூபாய் 9,500/- மதிப்புள்ள மின் வயர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தகுமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், நிஜல்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மகாதேவன் குளம், சந்திரேசன் (33). திசையன்விளை, ரோச்மாநகரை சேர்ந்த மைக்கேல்பவன்(22). ஆலந்தேரிவிளையை சேர்ந்த சேர்ம மகாராஜன்(45). ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது. தெரிய வந்ததையடுத்து வழக்கு பதிவு செய்து 3 நபர்களையும் (08.12.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்