திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூனியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் (48). என்பவருக்கு சக்திகுளம் ஆற்று படுகை அருகே குடிநீர் வழங்கும் உறைகிணறு உள்ளது. அதேபோல், கூனியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம்(41). என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருக்கு சொந்தமான தோட்டம் சேரன்மகாதேவி, சேரன் கோவில் பத்து ரயில்வே ரோடு அருகே உள்ளது. இவர்கள் இருவர் தோட்டத்தில் இருந்தும் மின் கம்பத்திற்கு செல்லும் மின் வயரை (18.08.2024) மற்றும் (20.09.2024) அன்று அடையாளம் தெரியாத நபர் திருடி சென்று விட்டார்கள்.
இது குறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் உதவி ஆய்வாளர், விஜயகுமார் யிடமும் அருணாச்சலம் என்பவர் உதவி ஆய்வாளர் முருகனிடமும் தனித்தனியாக புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்டதில், மொழிக்கரையை சேர்ந்த செல்வராஜ் (59). சங்குகிருஷ்ணன்(56). ஆகியோர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி சேரன்மகாதேவி காவல்துறையினர் இருவரையும் (23.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்