திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், பனைவிளை, மேலத் தெருவை சேர்ந்த ராஜா (36). என்பவர் எஸ். எஸ் புரத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் (13.04.2025) அன்று காலை வந்து பார்த்த போது, வீடு கட்டி வரும் இடத்தில் இருந்த மின் மோட்டார் வயரை காணவில்லை. இதுகுறித்து ராஜா கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், சூசையம்மாள் கிருபா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது திசையன்விளை, ஆனைகுடி, வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (39). மற்றும் ஒரு இளஞ்சிறார் என தெரியவந்ததையடுத்து சுரேஷை (16.04.2025) அன்று கைது செய்து இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லறத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்