மதுரை: மின்சார வாரியம் மற்றும் வனத்து எரறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தமிழ்நாடு மின்சார வாரியம் உபகோட்டம் மேற்கு மற்றும் வனத்துறையும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலை கிராமங்களான மாதரை,செட்டியபட்டி, தொட்டப்ப நாயக்கனூர், இடையபட்டி, வாசி நகர் உள்ளிட்ட கிராமங்களில் தோட்டத்து பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைப்பதால் மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் மின் விபத்தை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி