திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் நிலை ஒன்றில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அனல் மின் நிலைய வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும் மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். திட்ட தலைவர் பாண்டியன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு