திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்தர பாண்டிய புரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மடத்துவிளையை சேர்ந்த சிரில்(67). என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் காப்பர் வயர் கடந்த (12.04.2025) அன்று திருடு போனதால் இது குறித்த புகாரின் பேரில், ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் அதே ஊர் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆண்டோ டிக்சன்(19). என்பவருக்கு இந்தத் திருட்டில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து காப்பர் வயரை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்