திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் தேவி (55) இவர் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்த போது தோட்டத்து வீட்டுக்கு பின்புறம் மழையில் நனைந்து கொண்டு இருந்த பசுமாடுகளை கொட்டகையில் கட்டுவதற்காக சென்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தேவி உயிரிழந்தார். அவருடைய பசுமாடுகள் மீதும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா