மயிலாடுதுறை: மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1. சீர்காழி 2. மயிலாடுதுறை மற்றும் 3. பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மயிலாடுதுறை A.V.C பொறியியல் கல்லூரி கட்டிடத்தில் காப்பு அறைகளிலும், அதே போல தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1. திருவிடைமருதூர் 2. கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை A.V.C கலை மற்றும் அறிவியல் கல்லூ ரி கட்டிடத்தில் காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.கண்குராஜ் H பகதேவ் IAS., மாவட்ட ஆட்சியர் திரு. A.P.மகாபாரதி, IAS., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. K.மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. M.மணிமேகலை, அரசியல் கட்சி வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (20.04.24)ம் தேதி காலை 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கான காப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கண்ட 6 தொகுதிகளுக்கும் உள்ள காப்பு அறைகளுக்கு CISF படைவீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் மயிலாடுதுறை காவல் ஆளிநர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காப்பு அறை உள்ள இரண்டு கல்லுாரிகளுக்கும் வெளிபாதுகாப்பில் ஒரு சுழற்சி முறை பாதுகாப்பு பணிக்கு 1 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள், மற்றும் 50 காவலர்கள் வீதம் 3 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்கண்ட கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் C.C.T.V கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளன.