திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் பசு ஒன்று மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பழுதடைந்த மின் கம்பங்களையும், மின் கம்பிகளையும் சீரமைக்குமாறு பல முறை மின்வாரிய ஊழியர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பசு பலியானதற்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு