திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி (31) வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் மற்றும் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் இன்று காலை பொன்னேரி அடுத்த புளிக்குளம் பகுதியில் வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் அருகிலுள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த மதிக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்