மதுரை: மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் (தென்னாட்டு கஃபே ) உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,
நேற்றிரவு கடை முடிந்து பாத்திரம் கழவும் பணியில் ஈடுபட்டுவந்த பெண் ஊழியர் கருப்பாயி குளிர்சாதன பெட்டியின் சுவிட்சை தொட்டபோது திடிரென மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனைப்பார்த்த சக பணியாளர்கள் காப்பாற்ற சென்றபோது அவர்களுக்கும் மின்சாரம் அடுத்தடுத்து தாக்கியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி மின்சார தாக்குதலுக்கு உள்ளான தேவிகா, லதா, கருப்பாயி ஆகிய மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் , மின்சாரம் தாக்கிய லதாவை காப்பாற்ற சென்றபோது தவறிவிழுந்த பெண் ஊழியரான தேவிகா கீழே விழுந்து தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாத்திரம் கழுவும் பகுதியில் மின்சாரம் தாக்கிய மற்றொரு பணியாளரை காப்பாற்ற முயன்ற தேவிகா உயிரிழந்த நிலையில் மற்ற ஊழியர்களான லதா, கருப்பாயி ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கிய நிலையில் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















