இராமநாதபுரம் : முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த போது பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்றதில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில் பரமக்குடி எஸ். ஐ சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவஆசிர்வாதம், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, இராமநாதபுரம் DIG அபினவ்குமார், உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தி போலீஸ் மரியாதை உடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி