திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த வீரசக்கம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தை 3 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் மின்கம்பம் சேதம் அடைந்து மின் வயர்கள் அறுந்து விழுந்தது செம்பட்டி துணை மின் நிலையத்தில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேற்படி சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















