திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் பஜார் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ மினி லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசங்கி உயிரிழப்பு. பொன்னேரி சின்னக்காவனம் பகுதியை சேர்ந்த அஜித் வயது (22). தந்தையின் பெயர் மாரி தாயின் பெயர் மஞ்சுளா. தாய் தந்தையர் இருவரும் தற்பொழுது இல்லை என்று கூறப்படுகிறது. இவர் சாலையில் விபத்தில் இறக்கும் நபர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் இருந்துள்ளார். தாய் தண்டை இல்லாத நிலையில் அஜித் தான் வேலை செய்யும் கடையிலேயே தனியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் இறந்த பலரின் உடலை அப்புறப்படுத்திய நபரின் உயிரும் அதே போன்று விபத்தில் சாலையில் பறிபோனதை பார்த்து அவரின் சக நண்பர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து காரணமாக மீஞ்சூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த அஜித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு