திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் காரணமாக அதிகமான மனஅழுதத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றது. இதனை போக்கும் விதமாக தமிழக காவல்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து போதை ஒழிப்பு குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தை போதை வஸ்து இல்லாத தமிழகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு மற்றும் அதன் நிமித்தம் ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் நோக்கத்தோடு அம்பாசமுத்திரம் காவல்துறை மற்றும் அம்பாசமுத்திரம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அம்பாசமுத்திரம் காவல் துறையின் மூலம் மினி மாரத்தான் ஓட்டம் ஆண்கள் (10 கி.மீ) மற்றும் பெண்களுக்கு (5 கி.மீ) என 20.11.2022 ம் தேதி அன்று காலை 06.15 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியானது கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் அரசு மற்றும் தனியார் உயர் நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம். மினி மாரத்தானில் பங்கேற்க விருப்பம் உள்ள நபர்கள் இலவச படிவத்தை (பரணி ஸ்போர்ட்ஸ் கிளப் அம்பாசமுத்திரம்) அவர்களிடம் பெற்று பூர்த்தி செய்து 17.11.22-ம்தேதி அன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் வரும் படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. பரணி ஸ்போர்ட்ஸ் கிளப், அம்பாசமுத்திரத்தில் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் ஒவ்வொறு போட்டியாளர்களுக்கும் தனித்தனி Chest No. வழங்கப்படும். அதிக அளவில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் பள்ளி/கல்லூரிகளுக்கு நினைவு பரிசு சிறப்பு விருந்தினரால் வழங்கப்படும். அதிகமான பரிசுகள் பெறும் பள்ளி/கல்லூரி-க்கு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பரிசு சிறப்பு விருந்தினரால் வழங்கப்படும். மினி மாரத்தான் போட்டியின் விதிமுறைகள் சரியாக பின் தொடர வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படமாட்டாது. சிறந்த நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு இப்போட்டியானது நடைபெறும். போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்படுகிறது மினி மாரத்தானில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்