அரியலூர் : அரியலூர் பகுதியில் மாந்திரீக பரிகாரம் செய்வதாக செல்போன் மூலம் 12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்திரவின்படி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிசேரன்(சைபர் கிரைம்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அரியலூர் சைபர் கிரைம் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், கார் ,இரண்டு சக்கர வாகனங்கள், நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. சைபர் குற்றவாளிகள் மற்றும் மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.