அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.செல்வராஜ் அவர்கள், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் (26.03.2026) அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
















