திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை மற்றும் அடகு நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆக. 23 ஆம் தேதி இவரது அடகு கடையில் 278 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றன. இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின்படி மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் கிடைத்த தகவலின் படி தற்போது, தனிப்படை பிரிவினர் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்