திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு (22.01.2026) அன்று காலை வழக்கம் போல் நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தகவல் வந்தது.
இது குறித்த தகவலின்பேரில், திருநெல்வேலி மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் பினுகுமார் தலைமையிலான காவல்துறையினர், நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றப் பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















