திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் புதிதாக Whatsapp Photo Malware Scam என்ற மோசடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் சமூக வலைதளமான Whatsapp-ல் தெரியாத எண்ணிலிருந்து உங்களது Whatsapp எண்ணிற்கு வரும் புகைப்படத்தை தொடும்போது அந்த புகைப்படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் Malware உங்கள் கைபேசியை Hack செய்து உங்களுடைய வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், OTP’s UPI தகவல்களைத் திருடவும், உங்களுக்கு தெரியாமல் கைபேசியை கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்க்னோகிராபி எனப்படும் ஒரு வகையான Data (Link, APK File, Etc.,) அவர்கள் அனுப்பும் படங்களுக்குள் மறைத்து வைக்கப்படுகிறது. நீங்கள் அந்தப் படத்தைத் திறக்கும் தருணத்தில், உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு, உங்கள் அனைத்து விவரங்களும் திருடப்பட்டு விடும். உங்கள் வங்கி கணக்கிலிருந்து சட்ட விரோதமாக பணம் எடுக்கப்படும். மற்ற மோசடிகளைப் போல் உங்களுக்கு OTP எச்சரிக்கை கூட கிடைக்காது. எனவே இதுபோன்ற தெரியாத எண்ணிலிருந்து உங்களது Whats app எண்ணிற்கு வரும் புகைப்படத்தை தொடுவதை தவிர்க்க வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் www.cybercrime.gov.in og 1930 Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N..சிலம்பரசன், இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்