தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது சி.எம்.எஸ். நகர், இங்கு வசிப்பவர் மூக்கையா மகன் திருநாவுக்கரசு (35).இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிமணி (28), மகள் ஜீவிதா (5), ஆகியோர் உள்ளனர், தற்போது ஜீவிதா 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
கொலை செய்யப்பட்ட மூ.திருநாவுக்கரசு தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ஆங்கூர் பாளையம் சாலையில் உள்ள தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை ஒப்பந்தத்திற்கு எடுத்து பராமரித்து வருகிறார்.
சம்பவ நாளன்று கழிப்பறைக்கு சென்றவர்கள் அங்கு திருநாவுக்கரசு ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடைப்பதை பார்த்து தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெற்கு போலீசார் விசாரணை செய்து முன்விரோதம் காரணமாக இதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ராஜேஷ் (21), தங்கபாண்டி மகன் கார்த்திக் (20), ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.