தூத்துக்குடி: சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity) வலியுறுத்தி நடைபெற்ற மாணவ, மாணவியருக்கா மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு.
சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில், அக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் சுமார் 100 மாணவர்கள் தூத்துக்குடி மறவன்மடம் பேரூந்து நிறுத்தத்திலிருந்தும், 100 மாணவிகள் கோரம்பள்ளம் பேரூந்து நிறுத்தத்திலிருந்தும் இன்று (31.10.2021) காலை 06.30 மணிக்கு மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை ஆரம்பித்து, தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நிறைவு செய்தனர்.
இவ்விரண்டு இடங்களிலும் இந்த ஓட்டப்பந்தயத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பின் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நிறைவடைந்ததையடுத்து மாணவ, மாணவிகள் சார்பில் முதல் இடத்தை பிடித்த 3 மாணவர்களுக்கும், 3 மாணவிகளுக்கும் தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசு வழங்கினார்கள்.
இவ்விழாவிற்கு மீன் வளக்கல்லூரி டீன் டாக்டர் திரு. சுஐத்குமார் அவர்களை தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அக்கல்லூரி விளையாட்டு செயலாளர் திரு. பார்த்திபன், உடற்பயிற்சி இயக்குனர் திரு. நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.
மேலும் இப்பரிசு விழாவில் மீன் வளக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும்; கலந்து கொண்டனர்.
இந்த மினி மாரத்தான் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், தலைமைக் காவலர் திரு. சாமிக்கண்ணு உட்பட போக்குவரத்துப்பிரிவு மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.