திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.
வருகிற 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக நாங்குநேரி, களக்காடு,வள்ளியூர்,இராதாபுரம் யூனியனுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன் IPS அவர்கள் உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 07.10.2021 இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு தேர்தல் நடைபெறும் நாளான 09.10.2021 காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தகவல்களை விளக்கிக் கூறினார். வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு. மதிவாணன், அவர்கள், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைசாமி, அவர்கள்,நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ், உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.