திருநெல்வேலி: திருநெல்வேலியில் (07.04.2025) அன்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவை வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்கள் கடத்தல்- விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை வாகனங்களையும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்பட 113 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்