திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. முன்னதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையின் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 180 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்