திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு. கண்ணபிரான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டார் எனக்கூறி எந்த சூழ்நிலையிலும் அரசிற்கு கண்டன எதிர்ப்பினை தெரிவிக்க தயார் நிலையில் இருக்குமாறு Dkvei Tamilnadu என்கிற facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது பற்றி மறுப்பு தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை, கண்ணபிரான் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள், கள்ளத் துப்பாக்கி மற்றும் அருவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததற்காக இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்