கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள். பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் படி சிறப்புப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு அருகே அதிரடி சோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி (29.11.2023) -ந் தேதி கள்ளக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் வேலு மகன் சரவணன் (32). அண்ணா நகர் பகுதியில் சுப்பிரமணியன் மகன் முருகேசன் (62), பகண்டை கூட்டு சாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தில் ராமதாஸ் மகன் சுரேஷ் (30). சங்கரபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடசிறுவள்ளூர் கிராமத்தில் மாரியா பிள்ளை மகன் அறிவழகன் (28). சங்கராபுரம் பகுதியில் சீனுவாசன் மகன் ஹரிஷ் (19). திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மடப்பட்டு கிராமத்தில் வைரக்கண்ணு மகன் அய்யப்பன் (27). கெடிலம் கிராமத்தில் பொன்னுசாமி மகன் இராமன் (62). திருநாவலூர் பகுதியில் குப்புசாமி மகன் சுகுமார் (44). தியாகதுருகம் பகுதியில் சின்னா மகன் விக்ரம் (37), உளுந்தூர்பேட்டை பகுதியில் திருநாவலூரை சேர்ந்த 1காண்டீபன் மகன் வெங்கடேசன் (45), மணலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியந்தல் கிராமத்தில் ராஜாராமன் மனைவி நதியா (36). மற்றும் சின்னசேலம் பகுதியில் ராமசாமி மகன் ஆறுமுகம் (70). . சீனுவாசன் மகன் கதிரவணன் (60). ஆகியோர் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் 13 நபர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்த நிலையில் 9 நபர்கள் நீதீமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், வர்களிடமிருந்து சுமார் 15 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து 2 கடைகளுக்கு வருவாய்துறையினர் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.