திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாகவும் பிற இனத்தவரை இழிவு படுத்தும் விதமாக, சாதிய வன்மத்தை தூண்டும் விதமாக புகைப்படம், வீடியோ மற்றும் சொற்கள் பதிவிட்டதாக கடந்த 2023 -ம் வருடம் 63 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட காவல் நிலையங்களில் 49 வழக்குகள் பல்வேறு தரப்பினர் மீது பாகுபாடின்றி பதிவு செய்தும், 2024-ம் வருடத்தில் 40 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் 33 வழக்குகள் பதிவு செய்தும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் அனைத்து கருத்துக்கள் மற்றும் பேட்டிகள் கவனமுடன் சமூக வலைதள பிரிவில் தினந்தோறும் கண்காணிக்கப்படுவதால் தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்