திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், (13:01.2025) முதல் (19.012024) வரை பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாக கொண்டாடும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம், கடைத்தெரு. மற்றும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் கூடுதலான காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 11 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 32 காவல் ஆய்வாளர்கள். 146 உதவி ஆய்வாளர்கள், மற்றும் 1211 காவல் ஆளிநர்களை கொண்டு 37 இடங்களில் வாகன தணிக்கை செய்யவும், 16 இரு மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்துபணி 172 இடங்கள் உட்பட சுழற்சி முறையில் 1400 காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்