திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், சாலை பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைப்பதின் முக்கியத்துவம் குறித்தும், சைபர் குற்றங்கள் குறித்தும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாடகைக்கு தங்கும் நபர்களின் முழு பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் புகைப்படம் உள்ள அடையாள அட்டை ஆதார் கார்டு நகல்களை வீட்டின் உரிமையாளர்கள் கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















