திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குற்ற வழக்கில் ஈடுபடும்
இளையசமுதாயத்தினரிடையே சமூக மாற்றத்தை ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுரையின் படி சேரன்மகாதேவி காவல் துனை கண்காணிப்பாளர் சத்யராஜ் ஆலோசனையின் படி, காவல் ஆய்வாளர், தர்மராஜ், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பொதுமக்களுடன் இனைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சேரன்மகாதேவியில் காவல் ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் பொதுமக்களுடன் இனைந்து சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 35 ஆண்டுகளுக்கு பின் காவல்துறையால் இந்த விளையாட்டு போட்டிகள் காவல் ஆய்வாளர், தர்மராஜ் மூலம் நடத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பொது மக்கள் தெரிவித்தனர். மேலும் 76 வது குடியரசு தினத்ததை முன்னிட்டு சேரன்மகாதேவி கங்கணாங்குளத்தில் தென் மாவட்டங்களுக்கு இடையிலான கபடி போட்டியும், சேரன்மகாதேவியில் மாவட்ட அளவில் கைப்பந்தாட்ட போட்டியும் நடத்தப்பட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை செயல்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்