திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை (17.12.2024) திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப., 2024 – ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், பேச்சிமுத்து, தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள், உடமைகள் மற்றும் காவல்துறையினரின் அரசு வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப, மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்