மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் அளிப்பது வழக்கம்.
வழக்கம்போல, பொது மக்கள் மனுக்களை, அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்தவர்களை, ஆயூதப்படை போலீசாரை வைத்து, பொதுமக்களை சோதனைக்கு உள்ளாக்கினர்.
இதை வந்தவர்கள் புலம்புவதை கேட்க முடிந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள், போட்டோகிராபர் களை பைகளை சோதிக்க தவறவில்லை.
இதில், வேகம் காட்டும் போலீசார், மதுரை நகரில் ஷேர் ஆட்டோக்கள் அதிக நபரை ஏற்றிக் கொண்டு, அதிக வேகமாக செல்வதை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி