விருதுநகர் : கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் பகுதியில், தனியார் பள்ளியில் வன்முறை கும்பல் புகுந்து, பள்ளி கட்டிடம், பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று தமிழகத்தில், உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், உள்ள அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்றும், அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படுவதை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு .மேகநாதரெட்டி, தகவல் வெளியிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி