திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னேற்பாடு முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், பேரிடர் மீட்பு மற்றும் தடுப்பு சாதனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றினை (23.10.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆய்வு மேற்கொண்டு பேரிடர் மீட்பு குழுவினருக்கு அறிவுரை வழங்கினார். மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் ஆளினர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மழை மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















