கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்துக்கு உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சம்பவம் தொடர்பான விவரங்களை காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சட்ட உதவிகளும் பாதுகாப்பும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
















