தென்காசி: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வடகரையில் அமைந்துள்ள அன்பு இல்லத்தில் கொண்டாடினார்.
சுமார் 120 சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசித்து வரும் இந்த இல்லத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று அங்கு உள்ளார்களுடன் இணைந்து கேக் வெட்டி சமத்துவ கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய மனிதாபிமானமிக்க இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.