தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் புதியம் புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி (02.07.2024) சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. பாமாபத்மினி மற்றும் போலீசார் சாத்தான்குளம் சிறப்பூர் கிராம பகுதியில் பொதுமக்களிடமும், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி மற்றும் போலீசார் தூத்துக்குடி தஷ்நேவிஸ் பள்ளியில் மாணவிகளிடமும், புதியம்புத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சீதாராமன் மற்றும் போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமடம் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 4015 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,31,260 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.