தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிபபாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மணியாச்சி, கடம்பூர், விளாத்திகுளம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி (15.07.2024) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், மணியாச்சி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. வீரபாண்டியன் மற்றும் போலீசார் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமும், கடம்பூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. சத்யா மற்றும் போலீசார் கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆயிரவன்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும், விளாத்திகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. திருமலை மற்றும் போலீசார் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களிடமும் “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 4059 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,32,495 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.