தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி (28.11.2023) ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கானி சேனையர் தெருவில் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 3762 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,18,656 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.