தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி பசுவந்தனை, முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி (24.11.2023) மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கல்லூரியில் மாணவிகளிடமும், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அல்லிஅரசன் மற்றும் போலீசார் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அய்யப்பன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடசாமிபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அருள் மோசஸ் மற்றும் போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுசுப்பிரமணியபுரம் கிராம பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 3753 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,18,226 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.