செங்கல்பட்டு: வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை யொட்டி, திருவடிசூலத்தில் அமைந்துள்ள 41 அடி உயரமுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் கருமாரி அம்மனுக்கு மகா அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ள தேவி ஶ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில்புரம் பகுதியில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களின் ஆதிசக்தியாக 51 அடி யில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை பெளர்ணமி, வரலட்சுமி விரதம் ஆகிய விழாவையொட்டி, ஆயிரம் குடங்களால் பாலபிஷேகமும், சுமார் 2,000 கிலோ மஞ்சள்தூள் அபிஷேகமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்ற விழாவையொட்டி கோ பூஜை, விநாயகர், சுயம்பு அம்மன் வராகி அம்மன் உள்ளிட்ட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடை பெற்றன. தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து
அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் புண்ணியகோட்டி மதுரை முத்துசாமிகள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்