தேனி: கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார்கள் கூடலூர் ஏகலூத்து பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பதினெட்டாம் கால்வாய் பகுதியில், சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு இளைஞர்களை பிடித்து, சோதனை செய்தபோது மான்இறைச்சி இருந்ததால் போலீசார் அவர்களை கம்பம் மேற்கு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கம்பம் மேற்கு வனச் சரகர் திரு.அன்பு நடத்திய விசாரணையில் கூடலூரைச் சேர்ந்த தங்கம் மகன் சூர்யா 23 மற்றும் பழனிச்சாமி மகன் செந்தில்குமார 37 என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து மான்வேட்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கம்பம் மேற்கு வனச்சரகர் திரு.அன்பு தலைமையில், வனவர்கள் உட்பட்ட வனக்குழுவினர் மான்வேட்டையில் ஈடுபட்ட மேலும் 6 பேர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூரைச் சேர்ந்த முருகன் மகன் சூரியபிரபு(29), முத்துதேவர் மகன் முருகன்(41), வைரவன் மகன் பால்பாண்டி(27), தங்கவேல் மகன் முத்துப்பாண்டி(31) ஆகிய 4 பேர்களை கம்பம் மேற்கு வனச்சரக உயிரின வழக்கின்படி கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் பயன்படுத்திய மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமைறைவாக உள்ள மகாராஜன் மகன் பாலமுருகன்(50), அவரது மகன் விஜய்ஆனந்த் (24) ஆகியோரை தேடி வருன்றனர்.