திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் பதர்தீன் சொந்தமான தென்னந் தோப்பில் துப்பாக்கி கொண்டு பெண் கடமானை வேட்டையாடி கறி துண்டுகளாக வெட்டி கொண்டிருந்த வெள்ளோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது மகனான ஆல்வின் எடிசன் வனத்துறையினரை கண்டதும் துப்பாக்கியுடன் தப்பி ஓடி தலைமறைவு மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகனை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா