திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேல தென்கலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 11.02.2022-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் பீரோவை உடைத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பள்ளிவாசல் தலைவர், அப்துல் காதர் 57,என்பவர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் மீது விசாரணை மேற்கொண்டு வந்த மானூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முனியசாமி அவர்கள் தலைமையிலான முதல் நிலை காவலர்கள் திரு. பேதுரு, திரு.பட்டன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்ட செய்துங்கநல்லூரை சேர்ந்த தமீம்அன்சாரி 29, என்பவரை இன்று கைது செய்து குற்றவாளியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1500 பணத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.